கார்பென்டருக்கு 25 டிப்ஸ்கள்! மே-2013


இன்றைய கட்டுமானத்துறையில் எத்தனைதான் தொழிற்நுட்பம் புதிது புதிதாக வந்தாலும், மர வேலைகளுக்கு இருக்கும் மவுசு ஏறிக்கொண்டேதான் வருகிறது. கார்பென்டர்களுக்கான கணிசமான சம்பளமும் உயர்ந்து கொண்டுதான் வருகிறது. நீங்கள் கார்பென்டராக இருந்தால் உங்களது திறமையை இன்னும் மேம்படுத்திக்கொள்ள இதோ 25 டிப்ஸ்கள். 1. எந்த வகை மரத்தைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு வீட்டுச் சொந்தக்காரர்களுக்கு நீங்கள் ஆலோசனை சொல்லலாம். குறிப்பிட்ட மரத்தைத்தான் வாங்க வேண்டும் என்று அடித்துச் சொல்ல வேண்டாம். 2. வீட்டுக்காரர்கள் விரும்புகிற இடத்தில், கடையில் மரங்களை வாங்கட்டும். நீங்கள் குறிப்பிடும் கடையில்தான் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். 3. மரம், பிளாஸ்டிக், உலோகம் என எதுவாக இருந்தாலும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் பொருட்களைப் பயன்படுத்தப் போகிறவர்கள் வீட்டு உரிமையாளர்கள்தான். எனவே, அவர்களது விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 4. குறிப்பிட்ட பயன்பாட்டிற்குக் குறிப்பிட்ட பொருள் பொருத்தமாக இராது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், வீட்டுக்காரர்களுக்கு அந்த அளவுக்குத் தெரிந்திருக்காது. என்னென்ன சங்கடங்கள் வரக்கூடும் என்பதை எடுத்துச்சொல்லுங்கள். 5. முன்பணம் வாங்குவதில் கவனமாக இருங்கள்.உங்கள் வேலைக்கு மீறிய தொகையை முன்கூட்டியே வாங்க முற்படாதீர்கள். ஒருவேளை உங்களால் வேலையை முடிக்காமல் போனால் உங்களுக்குத்தான் அதிகச் சுமையாக அமைந்துவிடும். 6. கருவிகளைப் பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துங்கள். தீட்டுவதற்கு நேரம் வீணாகிறதே என்று பார்க்காதீர்கள். வெட்டும் வேலையை விரைவில் முடித்துவிடலாம்.உங்கள் நண்பர்களே உங்கள் கருவிகளைக் கடன் கேட்பார்கள். அதை முடிந்த அளவு தவிர்க்கப் பாருங்கள். 7. ஒருசிறிய நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள்,அவற்றைத் தவிர்த்த விதம், வேலையில் நீங்களே கண்டுபிடித்த புதிய உத்தி போன்றவற்றை அதில் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கே அதுபெரிய உதவியாக இருக்கும். 8. தேவைப்படும் அளவு மரத்தைச் சரியாகக் கணக்குப் போட்டுவாங்கி வாருங்கள். எதையும் வீணாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 9. நீங்கள் வேலை செய்யும் இடம் வெயில்,மழைக்குப் பாதுகாப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டம் அவசியம். வீட்டிலேயே உங்கள் பட்டறையை வைத்துக் கொண்டு செயல்படுகிறீர்களா? பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். 10. உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி, நேரக் கணக்குப்படியா? நாள் கணக்கா? அல்லது பொருள்எண்ணிக்கையைப் பொருத்ததா? என்பதைத் தெளிவாக்குங்கள் . இதை ஒரு ஒப்பந்தம் போல் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் சங்கடம் வராமல் தவிர்க்கலாம். 11. உங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கேற்ப வேலைகளைப் பிடியுங்கள். பேராசைப்பட்டு அதிக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு அல்லல்படாதீர்கள். 12. உங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். உழைக்கும் நேரத்தை வரையறை செய்து கொள்ளுங்கள்.வேலை செய்யும்போது முகத்தில் துணி கட்டிக் கொள்வதுபோன்ற சின்னச் சின்ன விக்ஷஷயங்களில்அலட்சியம் காட்டாதீர்கள். 13.எப்பொழுதுமே புதுவித கிரியேட்டிவிட்டி படைப்புகளுக்கு மவுசு அதிகம். வழக்கமான கட்டில்கள், அலமாரிகள், ஃபர்னிச்சர்களுக்குப் பதிலாக, புது வடிவத்தில், அசத்தலான தோற்றத்தில், நிறைய மரத் தயாரிப்புக்களை உருவாக்குங்கள். இவற்றை உங்களது பட்டறையிலோ, நீங்கள் வேலை செய்யும் இடத்திலோ காட்சிக்காக வையுங்கள். அவற்ஷூல் நிச்சயம் கவரக்கூடியத் தன்மை இருந்தால், நீங்களும் நிச்சயம் பிரபலமாவீர்கள். 14.நகரங்களில் இப்போது பெரும் பற்றாக்குறையே இடம்தான். எனவே, இடத்தைச் சேமிக்கிற எந்த விக்ஷயத்திற்கும் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் தயாரிக்கும் பொருட்களும் இடத்தைக் குறைவாகப் பயன்படுத்துகிற, ஆனால் பயன்பாடுகள் அதிகமாக இருக்கிறவையாகவே உருவாகட்டும். பிறகு பாருங்கள், உங்களது தயாரிப்புகள் சந்தையில் எப்படிப் பேசப்படுகின்றன என்பதை. 15. தற்போது மல்டி பர்போஸ் ஃபர்னிச்சர்கள்தான் பிரபலமாகி வருகின்றன. அதாவது, நீட்டினால் சோஃபா, மடக்கினால் மேஜை, மடித்தால் நாற்காலி என்பது போன்ற ஃபர்னிச்சர்களை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது? 16. நீங்கள் செய்யும் எல்லா பொருட்களையுமே பார்த்தவுடன் அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்பதை உங்கள் சக போட்டியாளர்கள் மட்டுமல்ல, வாடிக்கையாளரும் உணரும் வகையில் உருவாக்குங்கள். அதாவது, ஓரத்தில் விநாயகர், சிலுவை, லோகோ போன்றவற்றைப் பொறிப்பது. 17. நீங்கள் சொந்தமாக பட்டறை வைத்திருந்தால், அதன் ஒரு ஓரத்திலேயே சிறிய மரக்கிடங்கு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அரிதாகக் கிடைக்கிற மர வகைகளை எத்தனை காசானாலும் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதானாலும் அது நமக்கு லாபத்தைத் தரும். 18. உலகளாவிய மரங்கள் மற்றும் ஃபர்னிச்சர் சந்தையைப் பற்றி அப்டேட்டாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது தொடர்பான கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். 19. எந்த புதிய அறிவியல் மாற்றம் வந்தாலும், அதனுடன் உங்கள் தொழிலை எவ்வாறு இணைப்பது என்பதை யோசியுங்கள். உதாரணத்திற்கு, டெலிபோன் போய் செல்போன் வந்தது, தற்போது செல்போன் போய் ஆன்ட்ராய்டு, ஐ போன் வந்திருக்கின்றன. இவை சற்று அளவு பெரிது. இவற்றிற்கு ஏற்றாற்போல மர ஸ்டான்டுகளை, சார்ஜர் பாக்ஸ்களை நீங்கள் உருவாக்கலாம். இவை ஒரு உதாரணம்தான். இவை போன்றே, நீங்கள் பல மின்னணு சாதனங்களுடன் சுலபமாகத் தொடர்புப்படுத்தலாம். 20. குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய ஸ்டிக்கர்கள் இருக்கின்றன. அவற்றில் உங்கள் முகவரி, அலைபேசி விவரங்ளைப் பொஷூத்துவைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்து முடிக்கும் பொருட்களின் மேல் அவற்றை ஒட்டிக் கொடுங்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். 21. புதிதாகச் செய்வதுமட்டுமே என் வேலை என்று வைத்துக் கொள்ளாதீர்கள். பழையவற்றைப் பராமரிப்பதும் பழுதுபார்ப்பதும் கூட நல்ல பணிதான். அதில் உங்களுக்குப் புதிய, பயனுள்ள அனுபவங்கள் கிடைக்கும். 22. மிகவும் பழமை வாய்ந்த மரச் சாமான்கள், கட்டடப் பொருட்களைக் காண நேர்கிறதா? விற்பவர்களிடம் பேரம் பேசி வாங்குங்கள். பழம் பொருட்களுக்கு நல்ல சந்தை இருக்கிறது இதில் நீங்கள் கணிசமாக ஆதாயம் பார்க்கலாம். 23. சில நேரங்களில், செய்வதற்குவேலை ஒன்றும் கிடைக்காமல் போகலாம். அப்போது நீங்களே கொஞ்சம்முதலீடு செய்து சில பொருட்களைத் தயாரியுங்கள். முடிந்தபோது விற்றுக் கொள்ளலாம். 24.வெளிநாட்டுப் பத்திரிகைகள், தொழிற்நுட்ப வீடியோக்களைப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது தகுதியை வளர்த்துக் கொள்ள, புத்தகங்களைப் படியுங்கள். நன்கு வேலை தெரிந்தவர்களுடன் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பலருக்கும் கற்றுக் கொடுங்கள். இதில் தொழில் இரகசியம் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. 25. மொத்தமாக ஒரு ஆர்டர் எடுக்கும்போது கொஞ்சம் விலையைக் குறைத்து காசு வாங்குவது நமது இயல்பு. ஆனால், அதன் கூடவே இலவச இணைப்பாக ஏதேனும் ஒரு சிறிய, ஆனால் அசத்தலான கைவினைப் பொருள் ஒன்றை செய்து இலவசமாக வாடிக்கையாளருக்கு வழங்குங்கள். அது சிலையாகவோ, அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாகவோ இருக்கலாம். பெங்களூருவில் ஒரு கார்பென்டர் வாடிக்கையாளர் உருவத்தை அச்சு அசலாக மரத்தில் வடித்து, சிற்பமாகச் செய்து, பரிசாகக் கொடுத்து அசத்துகிறாராம். நீங்கள் ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்யுங்களேன்!

தானியங்கி கலவைப் பூச்சு இயந்திரம்.


வணக்கம் கட்டுமானத்துறை நண்பர்களே. கட்டுமானத்தை பிளான் செய்து சுற்றிலும் சுவர்களை எழுப்பியாகிவிட்டது.அடுத்து என்ன?சுவற்றிற்கு மேற்பூச்சு பூசுதல் தானே!இது முடிந்தால்தான் வீடு வீடாக இருக்கும்.கட்டுமானம் நிறைவுபெற்ற கட்டுமானங்களாக இருக்கும்.ஆனால்,கலவை பூசுதல் என்பது சுலபமான காரியம் அல்ல என்பது உங்களுக்குப் புரியும். ஒரு அங்குல தடிமனுக்கு மேற்பூச்சு பூச வேண்டுமெனில்,கொலுத்து கரண்டியால் எத்தனை தடவை நாம் சிமெண்ட் கலவையை அள்ளி ஈரச்சுவற்றில் வீச வேண்டி இருக்கிறது?பிறகு அதை லெவல் செய்ய வேண்டும் அதற்குப்பிறகு,மேற்பூச்சுக்கு வழவழப்பு தன்மை கொடுப்பதற்கு தனியாக சிமெண்ட் குழம்பைத் தடவ வேண்டும்.இதை செய்யும் கட்டுமானத் தொழிலாளியை நாம் பெரியாள் என்று அழைப்போம்.அவருக்கு உதவியாக இரண்டு சித்தாள்களை தந்துவிட வேண்டும்.இந்த மூன்று பேரும் சேர்ந்து ஒரு நாளெல்லாம் 10க்கு 8 அடி சுவற்றிற்கு மேற்பூச்சு பூசினாலே அதிகம்.அப்படியெனில்,ஒரு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு கலவை பூசவேண்டுமெனில் எத்தனை நாட்களாகும்? எத்தனை செலவாகும்? தனி வீட்டின் கதையே இப்படி என்றால்,பன்னடுக்கு மாடி கட்டும் பில்டர்களின் நிலை என்ன?அவர்கள் எத்தனை சதுர அடி சுவற்றிற்கு கலவை மேற்பூச்சு பூச வேண்டும்?அதற்கு எத்தனை நாட்களாகும்?எத்தனை நபர்களுக்கு எத்தனை நாள் கூலி தரவேண்டியிருக்கும்? ''சரி சரி அதற்குதான் மோர்டார் ஸ்பிரேயிங் இயந்திரம்(Mortar Spraying Machine)போன்ற நவீன உபகரணங்கள் வந்திருக்கின்றனவே' என நீங்கள் சொல்லலாம். கொள்கலன் சிறியதாக இருப்பது.கையாள்வதில் அதிக சிரமம்.எப்போதுமே தோளில் தூக்கி வைத்திருக்கவேண்டிய அவசியம்,மேலும்,அதை கையாள்பவருக்குத் தொழிற்நுட்ப அறிவு தேவைபடுவது போன்ற பல கூறுகள் மோர்டார் ஸ்பிரேயிங் போன்ற இயந்திரங்களைபரவலாக பயன்படுத்துவதில் சிரமங்கள் அளிப்பதாகவே உள்ளன. இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லாத இயந்திரம் நான்.நான் என்றால் தானியங்கி கலவைப் பூச்சு இயந்திரம் (Automatic Wall Plastering Machine).கட்டுமானத்தின் சுவர் பூச்சுக்கு,குறிப்பாக உட்புற சுவர்களுக்கு பக்காவாக பொருந்துகிற கலவைப் பூச்சு இயந்திரம் நான். அளவில் சிறியதாக இருப்பதால் வெகு எளிதாக என்னை நீங்கள் நிறுவ முடியும்.என்னுடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்டீல் டிரேயில் 20 முதல் 30 கிலோ வரையிலான சிமெண்ட் கலவையைக் கொட்டிவிட வேண்டும்.மேற்பூச்சு பூச வேண்டிய சுவற்றுக்கு அருகில் என்னை நிறுத்திட வேண்டும்.கலவைப்பூச்சு ஒரே சீராக வருவதற்கும்,ஆடாமல்,அசையாமல் வருவதற்கும்,இரு ஸ்டீல் பைப்புகளை தரைக்கும்,மேல் தளத்திற்கும் இடையே இணைத்துவிட்டால் அதில் சிமெண்ட் கலவை டிரே மேலும் கீழும் சென்று வரும்.ஒரு தடவை டிரேயில் கலவை நிரப்பி விட்டால் 3 அடி அகலத்திற்கும் 8 அடி நீளத்திற்கும் சுவர் பூச்சு செய்து விடுவேன்.முதலில் கீழிருந்து மேலே செல்லும் போது சிமெண்ட் கலவையை தெளித்துவிட்டு,மேலிருந்து கீழே வரும்போது கலவையை சீராக்கி விடுவேன். இதை நான் செய்வதற்கு இரண்டு நிமிடங்கள்தான்.மனிதர்கள் இதை செய்தால் எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகிவிடும். தேவையான அளவிற்கு சிமெண்ட் கலவையை நீங்கள் ரெடி செய்து வைத்திருந்தால்,15 அடிக்கு 20 அடி அளவுள்ள அறைக்கு கலவை மேற்பூச்சு செய்ய எனக்கு அதிகபட்சம் 3 மணி நேரமே ஆகும்.இந்த் வேகத்தில் நான் வேலை செய்தால் உங்கள் வீடு அல்லது ப்ரொஜெக்டின் ஒட்டு மொத்த சுவர்மேற்பூச்சு வேலையும் சில நாட்களிலேயே முடிந்துவிடும். சுவற்றை மட்டும்தான் உன்னால் கலவை பூச முடியுமா?இல்லை .என்னால் கூரையின் உட்புறம் கூட கலவையை பூச முடியும்.என்னை இயக்குவதற்குத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் தேவையில்லை.சாதாரண இரண்டு ஆபரேட்டர்களே போதும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.மேனுவலாக பிளாஸ்டரிங் வேலை செய்யும்போது வீணடிக்கப்படுகிற சிமெண்ட் கலவையை விட என்னைப் பயன்படுத்தி கலவைப்பூச்சு மேற்கொள்கிறபோது குறைவான அளவே சிமெண்ட் கலவை வீணாகும் என்பதும் எனது பிளஸ் பாயின்ட்.சுவரும் கூரையும்,மற்றும் சுவரும்,சுவரும்,கூடுகிற மூலைகளில் மட்டும் நீங்கள் மேனுவலாக ஒரு டச் அப் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ரூ.50,000-ல் தொடங்கும் என்னைப் போன்ற தயாரிப்புகள் சீனாவில் மிகப் பரவலாகக் கிடைகின்றன.இவற்றை நீங்கள் பெற வேண்டுமெனில்,குறைந்தபட்சம் இரண்டு இயந்திரங்கள் ஆர்டர் செய்தாக வேண்டும்.மேலும் பணம் செலுத்திவிட்டு,15,20 நாட்கள் காத்திருக்க வேண்டும் போதாதற்கு சுங்க வரி,விற்பனை வரி வேறு செலுத்த வேண்டும்.இந்த தொல்லையெல்லாம் தீர்க்க ஆட்டோமேட்டிக் வால் பிளாஸ்டரிங் இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து தருவித்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யும் ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று இருக்கிறது.இங்கு ஆர்டர் செய்தால்,அடுத்த நாள் டெமோ அதற்கு அடுத்த நாள் டெலிவரி.

புது ஃபிளாட் வாங்க புறப்பட்டாச்சா ?ஏப்ரல்-2013 மாத இதழ்


ஃபிளாட்டை பற்றி எந்த விஷயமும் தெரியாமல் சம்மந்தப்பட்டவர்களை நீங்கள் தொடர்பு கொண்டால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம் என்பது ஒரு பக்கம்.இப்போதெல்லாம் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே வீடு,மனை கண்காட்சிகள் நடக்கின்றன.அங்கெல்லாம் நீங்கள் சென்றால் ஒரே இடத்தில பல நூறு புராஜெக்டுகள் பற்றிய விவரங்கள் தெரியவரும்.அவற்றை லொகேஷன்,அமென்டீஸ்,வசதிகள்,சேஃப்டி ஆகியன பொறுத்து பல்வேறு கட்டங்களாக வடிகட்டி,அவற்றுள் உங்களை திருப்திபடுத்தும் ஃபிளாட் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.இணையதளத்தில் சென்று தேடுதலைவிட இந்த முறை மிகவும் சிறந்ததாகவே எல்லோராலும் நம்பப்படுகிறது. ஃபிளாட் வாங்கும்போது விழிப்புடன் செயல்பட சில அடிப்படைத் தகவல்களைக் காண்போம். ஃபிளாட்டைத் தேர்வு செய்யும்போது கவனிக்கவேண்டியவை: 1.'ஃபிளாட்'டின் தாய்ப்பத்திரம் என்பது 3 நிலைகளை ஆதரவாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.ஒன்று நில உரிமையாளர் சார்ந்தது.அடுத்தது ஃபிளாட் ப்ரமோட்டரைச் சார்ந்தது.மூன்றாவது குடியிருப்பு கட்டுமான நிறுவனம் மற்றும் ஃபிளாட் வாங்கும் உரிமையாளர் இடையிலான முழு ஒப்பந்தப் பத்திரம் என 3 நிலை தாய் பத்திர சோதனை அவசியம். 'பட்டா' எனப்படும் நிரந்த நிலப்பதிவின் சாரத்தை வெளிப்படுத்தும் ஷரத்து.இது மட்டுமே உரிமையாளரின் சட்ட ரீதியிலான அரசு அனுமதி பெற்ற ஷரத்து.இந்த பட்டா அருகில் உள்ள தாசில்தார் ஆபிசில் உங்களின் நில உரிமைக்கு ஆதாரமாக பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம்(சி.எம்.டி.ஏ),ஏதேனும்,புதுகட்டிட வரைபடம் அனுமதிக்கு வரும்போது கேட்கப்படும் முக்கிய ஷரத்து'பட்டா'.ஃபிளாட் கட்டுமான நிலத்தின் அசல் பத்திரம்,சோதிக்கப்படவேண்டும். அதில் ஏதேனும் உயில் பாத்தியதை உள்ளதா?என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.இந்த உயில் குறித்த நகல்கள் உள்ளனவா?அல்லது வேறு எவருக்கேனும் இதன் முந்தைய உரிமையாளர் பாத்தியதை தந்துள்ளாரா?என்பதை சோதித்து அறியவேண்டும்.மூதாதையர் ரீதியில் இதில் வேறு யாருக்காவது பாத்தியதை கொண்டுள்ளதா?என்பதையும் அறிந்துணர வேண்டும். 'ஃபிளாட்' கட்டப்படும் நிலப்பகுதி யாரேனும் மொத்த நிலப்பகுதி யாரேனும் மொத்த நில உரிமையாளரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் அதற்கான பிரிவு ஒப்பந்தம் சோதிக்கப்படவேண்டும்.மேலும் நில உரிமையாளர் மூன்றாவது நபராக வேறு யாருக்காவது நிலப்பகுதியை தந்துள்ளாரா?என்பதையும் பதிவுத்துறை அலுவலகத்தின் உரிமையாளர்,சட்ட ரீதியிலான வாரிசுதாரர் என்பதை நீதிமன்ற ஆணைப்படி உறுதி செய்து உள்ளூர் பதிவு அலுவலகத்தில் பதிக்கப்பட்டுள்ளதா?என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இச்சொத்து உயிலாக இருப்பின் அதன் முந்தைய நிலை மற்றும் எவ்வகையில் அது உரிமையாளரின் உயிலாக உருபெற்றது?என்பதற்கான நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.'ஃ பிளாட்' கட்டிட நிலம் 'ப்ரமோட்ட'ரது சொந்த சொத்தாக இல்லாமல் வேறொருவரிடம் இருந்து வாங்கப்பட்டதாக இருக்கலாம்.இது தொடர்பான ஒப்பந்தம்.அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபட்டிருக்கும்.அதன் நகலை வாங்கி சோதனையிடவும். தாய்ப்பத்திரத்தின் ஒரிஜினலை சரிபார்க்கவும் மற்றும் பிற சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சரி பார்க்க வேண்டும். இது எவ்வகையான நில கைமாற்றாக இருந்தாலும் அது தொடர்பான ஷரத்துகளை முழு அளவில் சரி பார்க்கவேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக வில்லங்க சான்றிதழை பெற வேண்டும்.அது அச்சொத்தை வாங்கும் நாள் வரையிலானதாக இருக்க வேண்டும்.இதனை அவசியம் சரி பார்க்கவேண்டும். பட்டா,விற்பவரிடமிருந்து உங்கள் பெயருக்கு அதாவது நிலத்தை வாங்கியவர் பெயரில் மாற்றலாகி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாங்கப்பட்ட நிலச்சொத்து,அரசின் நகர்புற நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டதா?என்பதும் அவசியம் சரி பார்க்க வேண்டிய ஒன்று.மேலும் சில நிலங்கள்,தொழிலக விரிவாக்கத்திற்காக என்று கூறப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டிருக்க கூடும்.அப்படிப்பட்ட நிலத்தில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை.அதனால் நிலம் தொடர்பான இது போன்ற எல்லா ஷரத்துகளையும் உரிய அரசு ஆணையம் மூலம் அல்லது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டுப்பெறலாம்.இது ஆழமாக ஆய்ந்தறியப்பட வேண்டிய ஒன்று. 'சி.எம்.டி.ஏ' வின் குடியிருப்புகள் கட்டுவதற்கான 'சர்வே' எண் பெறப்பட்ட நிலமா?என்று கண்டறிய வேண்டும்.உரிய ஷரத்துகளை சரி பார்ப்பது மூலமே இது உறுதி செய்யப்படும். ஏற்கனவே அந்நிலத்தில் ஒருவர் குடியிருந்திருந்தால்,வாடகைதாரர் மற்றும் நில உரிமையாளரிடையே போடப்பட்ட ஒப்பந்தம் (இது தமிழ்நாடு வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது) சொத்து தொடர்பாக,3 வது நபர் ஒருவருடன் பரிவர்த்தனை ஏதும் நடந்திருந்தால்,அது தொடர்பான ஒப்பந்தம். அரசின் ஆணையங்கள் அந்நிலப்பகுதியில் அரசின் கையக திட்டத்தில் வருகிறதா?வந்துள்ளதா?வரப்போகிறதா?என்பது சரிபார்க்கப்படவேண்டும். நீங்கள் வாங்கவுள்ள கட்டிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். கட்டுமானத்திட்டம் மற்றும் கட்டுமான 'பெர்மிட்'பெறப்பட்டுள்ளதா? மற்றும் அது நடைமுறையில் உள்ளதா?என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. 'சி.எம்.டி.ஏ'விடம் இருந்து பெறப்பட்ட கட்டுமான நிறைவு சான்றிதழ் மற்றும் சென்னை மாநகராட்சியிடம் பெற வேண்டிய அதே போன்ற சான்றிதழ். இது தவிர கட்டுநர் அல்லது 'ப்ரமோட்டர்' தாம் வாக்களித்தபடி அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளாரா? அவரது கட்டிடம் தொடர்பான ஷரத்துகள் அனைத்தும் அசலானவைதானா?என்று உறுதி செய்ய வேண்டும்.அதே போன்று 'சி.எம்.டி.ஏ' அளித்துள்ள அனைத்து ரசீதுகளையும் சரிப்பார்க்க வேண்டும்.தேசிய கட்டுமான சட்ட வரையறைக்கு உட்பட்டு கட்டபட்டதுதானா இந்த கட்டிடம் என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.