புது ஃபிளாட் வாங்க புறப்பட்டாச்சா ?ஏப்ரல்-2013 மாத இதழ்


ஃபிளாட்டை பற்றி எந்த விஷயமும் தெரியாமல் சம்மந்தப்பட்டவர்களை நீங்கள் தொடர்பு கொண்டால் நாம் ஏமாற்றப்படுவது நிச்சயம் என்பது ஒரு பக்கம்.இப்போதெல்லாம் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆங்காங்கே வீடு,மனை கண்காட்சிகள் நடக்கின்றன.அங்கெல்லாம் நீங்கள் சென்றால் ஒரே இடத்தில பல நூறு புராஜெக்டுகள் பற்றிய விவரங்கள் தெரியவரும்.அவற்றை லொகேஷன்,அமென்டீஸ்,வசதிகள்,சேஃப்டி ஆகியன பொறுத்து பல்வேறு கட்டங்களாக வடிகட்டி,அவற்றுள் உங்களை திருப்திபடுத்தும் ஃபிளாட் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.இணையதளத்தில் சென்று தேடுதலைவிட இந்த முறை மிகவும் சிறந்ததாகவே எல்லோராலும் நம்பப்படுகிறது. ஃபிளாட் வாங்கும்போது விழிப்புடன் செயல்பட சில அடிப்படைத் தகவல்களைக் காண்போம். ஃபிளாட்டைத் தேர்வு செய்யும்போது கவனிக்கவேண்டியவை: 1.'ஃபிளாட்'டின் தாய்ப்பத்திரம் என்பது 3 நிலைகளை ஆதரவாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.ஒன்று நில உரிமையாளர் சார்ந்தது.அடுத்தது ஃபிளாட் ப்ரமோட்டரைச் சார்ந்தது.மூன்றாவது குடியிருப்பு கட்டுமான நிறுவனம் மற்றும் ஃபிளாட் வாங்கும் உரிமையாளர் இடையிலான முழு ஒப்பந்தப் பத்திரம் என 3 நிலை தாய் பத்திர சோதனை அவசியம். 'பட்டா' எனப்படும் நிரந்த நிலப்பதிவின் சாரத்தை வெளிப்படுத்தும் ஷரத்து.இது மட்டுமே உரிமையாளரின் சட்ட ரீதியிலான அரசு அனுமதி பெற்ற ஷரத்து.இந்த பட்டா அருகில் உள்ள தாசில்தார் ஆபிசில் உங்களின் நில உரிமைக்கு ஆதாரமாக பதிவு செய்யப்படுகிறது. சென்னையில் உள்ள சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம்(சி.எம்.டி.ஏ),ஏதேனும்,புதுகட்டிட வரைபடம் அனுமதிக்கு வரும்போது கேட்கப்படும் முக்கிய ஷரத்து'பட்டா'.ஃபிளாட் கட்டுமான நிலத்தின் அசல் பத்திரம்,சோதிக்கப்படவேண்டும். அதில் ஏதேனும் உயில் பாத்தியதை உள்ளதா?என்பதை ஆய்ந்தறிய வேண்டும்.இந்த உயில் குறித்த நகல்கள் உள்ளனவா?அல்லது வேறு எவருக்கேனும் இதன் முந்தைய உரிமையாளர் பாத்தியதை தந்துள்ளாரா?என்பதை சோதித்து அறியவேண்டும்.மூதாதையர் ரீதியில் இதில் வேறு யாருக்காவது பாத்தியதை கொண்டுள்ளதா?என்பதையும் அறிந்துணர வேண்டும். 'ஃபிளாட்' கட்டப்படும் நிலப்பகுதி யாரேனும் மொத்த நிலப்பகுதி யாரேனும் மொத்த நில உரிமையாளரிடம் இருந்து பிரிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் அதற்கான பிரிவு ஒப்பந்தம் சோதிக்கப்படவேண்டும்.மேலும் நில உரிமையாளர் மூன்றாவது நபராக வேறு யாருக்காவது நிலப்பகுதியை தந்துள்ளாரா?என்பதையும் பதிவுத்துறை அலுவலகத்தின் உரிமையாளர்,சட்ட ரீதியிலான வாரிசுதாரர் என்பதை நீதிமன்ற ஆணைப்படி உறுதி செய்து உள்ளூர் பதிவு அலுவலகத்தில் பதிக்கப்பட்டுள்ளதா?என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இச்சொத்து உயிலாக இருப்பின் அதன் முந்தைய நிலை மற்றும் எவ்வகையில் அது உரிமையாளரின் உயிலாக உருபெற்றது?என்பதற்கான நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.'ஃ பிளாட்' கட்டிட நிலம் 'ப்ரமோட்ட'ரது சொந்த சொத்தாக இல்லாமல் வேறொருவரிடம் இருந்து வாங்கப்பட்டதாக இருக்கலாம்.இது தொடர்பான ஒப்பந்தம்.அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யபட்டிருக்கும்.அதன் நகலை வாங்கி சோதனையிடவும். தாய்ப்பத்திரத்தின் ஒரிஜினலை சரிபார்க்கவும் மற்றும் பிற சான்றளிக்கப்பட்ட நகல்களையும் சரி பார்க்க வேண்டும். இது எவ்வகையான நில கைமாற்றாக இருந்தாலும் அது தொடர்பான ஷரத்துகளை முழு அளவில் சரி பார்க்கவேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக வில்லங்க சான்றிதழை பெற வேண்டும்.அது அச்சொத்தை வாங்கும் நாள் வரையிலானதாக இருக்க வேண்டும்.இதனை அவசியம் சரி பார்க்கவேண்டும். பட்டா,விற்பவரிடமிருந்து உங்கள் பெயருக்கு அதாவது நிலத்தை வாங்கியவர் பெயரில் மாற்றலாகி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாங்கப்பட்ட நிலச்சொத்து,அரசின் நகர்புற நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்டதா?என்பதும் அவசியம் சரி பார்க்க வேண்டிய ஒன்று.மேலும் சில நிலங்கள்,தொழிலக விரிவாக்கத்திற்காக என்று கூறப்பட்டு அரசு அனுமதி பெறப்பட்டிருக்க கூடும்.அப்படிப்பட்ட நிலத்தில் குடியிருப்புகள் கட்ட அனுமதிக்கப்படுவதில்லை.அதனால் நிலம் தொடர்பான இது போன்ற எல்லா ஷரத்துகளையும் உரிய அரசு ஆணையம் மூலம் அல்லது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டுப்பெறலாம்.இது ஆழமாக ஆய்ந்தறியப்பட வேண்டிய ஒன்று. 'சி.எம்.டி.ஏ' வின் குடியிருப்புகள் கட்டுவதற்கான 'சர்வே' எண் பெறப்பட்ட நிலமா?என்று கண்டறிய வேண்டும்.உரிய ஷரத்துகளை சரி பார்ப்பது மூலமே இது உறுதி செய்யப்படும். ஏற்கனவே அந்நிலத்தில் ஒருவர் குடியிருந்திருந்தால்,வாடகைதாரர் மற்றும் நில உரிமையாளரிடையே போடப்பட்ட ஒப்பந்தம் (இது தமிழ்நாடு வாடகைதாரர் பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது) சொத்து தொடர்பாக,3 வது நபர் ஒருவருடன் பரிவர்த்தனை ஏதும் நடந்திருந்தால்,அது தொடர்பான ஒப்பந்தம். அரசின் ஆணையங்கள் அந்நிலப்பகுதியில் அரசின் கையக திட்டத்தில் வருகிறதா?வந்துள்ளதா?வரப்போகிறதா?என்பது சரிபார்க்கப்படவேண்டும். நீங்கள் வாங்கவுள்ள கட்டிடத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம். கட்டுமானத்திட்டம் மற்றும் கட்டுமான 'பெர்மிட்'பெறப்பட்டுள்ளதா? மற்றும் அது நடைமுறையில் உள்ளதா?என்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. 'சி.எம்.டி.ஏ'விடம் இருந்து பெறப்பட்ட கட்டுமான நிறைவு சான்றிதழ் மற்றும் சென்னை மாநகராட்சியிடம் பெற வேண்டிய அதே போன்ற சான்றிதழ். இது தவிர கட்டுநர் அல்லது 'ப்ரமோட்டர்' தாம் வாக்களித்தபடி அனைத்து வசதிகளையும் செய்து தந்துள்ளாரா? அவரது கட்டிடம் தொடர்பான ஷரத்துகள் அனைத்தும் அசலானவைதானா?என்று உறுதி செய்ய வேண்டும்.அதே போன்று 'சி.எம்.டி.ஏ' அளித்துள்ள அனைத்து ரசீதுகளையும் சரிப்பார்க்க வேண்டும்.தேசிய கட்டுமான சட்ட வரையறைக்கு உட்பட்டு கட்டபட்டதுதானா இந்த கட்டிடம் என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.