பட்ஜெட் வீட்டிலிருந்து பங்களா வரை !


பெரும்பாடுபட்டு தனி வீட்டையோ, ஃப்ளாட்டையோ வாங்கிப் போட்டு குடி போகும் நடுத்தர மக்களின் கண் முன்னே நிழலாடுவது வீட்டுக்கடன் மட்டுமே. மாதாமாதம் இ.எம்.ஐ கட்டுகிற அவஸ்தையே பெரிதாக இருக்கும்போது தனது புது வீட்டிற்கான இன்டிரியர் பற்றி பெரிதாக கவலை கொள்ள மாட்டார்கள்.

       அதன் பயன் ? வீடு புத்தம் புதிதாக இருந்தாலும் பழைய வீட்டில் இருந்த எல்லா பொருட்களையுமே அடுக்கி வைத்திருப்பர். வீடும் பழைய வீட்டைப் போலவே காட்சியளிக்கும். “புத்தம் புதிய வீட்டிற்கு வந்து என்ன பலன்?. வீட்டில் உள்ள எல்லா பொருட்களையுமே நம்மால் புதிதாக வாங்க முடியாதுதான். ஆனால், கொஞ்சம் இன்டிரியர் அலங்காரத்திற்கு நாம் மெனக்கெட்டால் ஆடம்பரம் இல்லாத, அதே சமயம் அசத்தலான இன்டிரியர் அலங்காரத்தில் நம் வீடு ஜொலிக்கும். இதற்கென பெரும் பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. கொஞ்சம் முன்னேற்பாடாக திட்ட மிட்டிருந்தால் போதும்” என்கிறார் சென்னை எலைட் இன்டிரியர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கே. குமரன்.

       திரு. கே.குமரனுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இதில் பிரதிப் குமார் என்னும் சகோதரரும் (ஆர்கிடெக்ட்சர் பயின்றவர். தற்போது எலைட் இன்டிரியர் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பு இயக்குநராக இருக்கிறார்) இன்டிரியர் துறையில் பத்து ஆண்டு கால அனுபவமிக்கவர்கள். மின்னியல் கட்டிடவியலிலும் ஏராளமான பணிகளை செய்து முடித்தவர்கள். சென்னை கட்டுமானத்துறையில் இன்டிரியர் அலங்காரத்திற்கு என ஏராளமான தேவைகள் இருக்கவே தற்போது இன்டிரியரில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்கள். நாங்கள் நேர்காணலுக்காக சென்றபோது, ஒரு மிகப்பெரிய புராஜெக்டை சிறப்பாக முடித்த உற்சாகத்தோடு இருந்தார்கள். பட்ஜெட் வீடுகளுக்கான அலங்காரத்தை பற்றிக் கேட்டதும் மிகவும் உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார் திரு. கே.குமரன். “நடுத்தர மக்கள் வீட்டை வாங்கும்போது கூடுதலாக சில ஆயிரங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்

     . வீட்டின் விலை என ஒன்று இருந்தாலும் இ.பி டெபாசிட், வாட்டர் கனெக்ஷன், ரிஜிஸ்ட்ரேஷன், டாகுமெண்ட் சார்ஜ் என கூடுதல் கட்டணங்களை முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்றாற் போல் தொகையை தயார் செய்கிறார்கள் அல்லவா? அதுபோன்று தான் இன்டிரியருக்கென தங்களால் இயன்ற ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளலாமே? வீட்டின் விலை 30 லட்சம் என்றால், எண்பதாயிரம் ரூபாயை நம்மால் இன்டிரியருக்காக செலவு செய்ய முடியும் தானே? இன்டிரியர் என்பது நமது இல்லத்தை அழகாக்கும். நமது ரசனையை பறைசாற்றும் என்பதெல்லாம் கூட அடுத்ததுதான். மிக முக்கிய மாக ஒரு வீட்டின் இன்டிரியர் என்பது அந்த வீட்டின் கட்டிடச் சுவர்களை, தரைகளை, கூரைகளை பாதுகாக்கும் என்பது அனைத்து தரப்பு மக்களும் அறியக் கூடிய செய்தியாகும்.வீடு என்பது ஒரு கட்டிடம்தான். அதாவது பொம்மை மாதிரி. பொம்மைக்கு ஆடை அணிவித்து அழகு சேர்ப்பதுதான் நம்முடைய வீடுகளுக்கான இன்டிரியர் இன்னும் சொல்லப்போனால் இன்டிரியர் என்பது ஏறக்குறைய ஒரு மனிதனுடைய உடல் அமைப்பு மாதிரிதான். மேல் தோற்றம் எப்படி இருந்தாலும், உடலின் உள்ளே இருக்கும் பாகங்கள்தான் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.

    அதே மாதிரி வீடு எப்படி இருந்தாலும் அதிகம் நாம் வாழப்போவது வீட்டின் உள்ளேதான். ஆகவே, வீட்டைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இன்டிரியர்தான். வாடிக்கையாளர்கள் இன்டிரியர் பணிகளுக்கு ரூ.50,000 செலவிடுவார்கள், ரூ.1 லட்சம் செலவிடுவார்கள், ஏன்? ரூ.10 லட்சம் கூட செலவிடுவார்கள். நாங்கள் ரூ.50 லட்சத்திற்கான இன்டிரியர் பணிகளைக் கூட செய்திருக்கிறோம். ஆகவே, அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ற விதத்தில் நாங்கள் உள்ளலரங்காரங்களைச் செய்து தருகிறோம்.” என்றார் திரு. கே.குமரன். இன்டிரியர் முக்கியத்துவத்தை திரு. கே.குமரன் அவர்கள் சொல்ல எலைட் நிறுவனத்தைப் பற்றியும் அதன் பணிகளைப் பற்றியும் பேச ஆரம்பித்தார் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு இயக்குநரான திரு கே.பிரதிப் குமார். “சந்தையில் பல இன்டிரியர் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், எலைட் இன்டிரியர் நிறுவனம் இன்டிரியர் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தனக்கென சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனமாகும். படுக்கையறை, கிச்சன் மற்றும் வார்ட்ரோப் அலங்கரிப்பதற்குத் தேவையான பொருட்களை தயாரிப்பதற்காக நாங்கள் தனியாக தொழிற்சாலை வைத்திருக்கிறோம். குறைவான விலையில், நல்ல தரமான பொருட்களைக் கொண்டு இன்டிரியருக்கான பணிகளை முடிக்கிறோம். குறைந்த விலை, விநியோக செலவு மற்றும் தரமானதயாரிப்பு இவைதான் எங்கள் வெற்றிக்கான சூத்திரம். .

         ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர் வீட்டிற்குள் நுழையும்போது எங்களை நினைத்துக் கொள்ளும் வகையில் இன்டிரியர் பணிகளை செய்து முடிக்கிறோம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம், வீட்டைக் கட்டும்போது ஏற்பட்ட குறைகளையும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப நாங்கள் செய்யும் இன்டிரியர் பணிகளால் நிவர்த்தி செய்கிறோம். சிறிய கட்டுமானங்களுக்கு நாங்கள் செலுத்தும் அக்கறையோடுதான் பெரிய கட்டுமானங்களுக்கும் எங்கள் இன்டிரியர் பணிகளைச் செய்து தருகிறோம். அதற்கான நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய பொருட்களை உபயோகிக்கிறோம். பெரிய கட்டுநர்களுக்கென்று தனி பட்ஜெட் இருக்கிறது. அந்த பட்ஜெட்டிற்கு ஏற்ப நாங்கள் செய்து தருகிறோம். மேலும், அந்தக் கட்டுமானங்களில் ஒரே புராடெக்டுகளைப் பயன்படுத்தி இன்டிரியரை செய்யச் சொல்வார்கள். அதன்படியே நாங்களும் செய்வோம்.அதிகமான பட்ஜெட்டில் இன்டிரியர் செய்ய வேண்டியிருந்தால் இத்தாலியன் பி.யு. வண்ண ஷட்டர், ரப்பர்வுட் ஷட்டர் போன்ற உயர்தர பொருட்களை இறக்குமதி செய்து உபயோகிக்கிறோம்.

        ஏனெனில் சென்னையில் உயர்தர வடிவமைப்பிற்கான சாதனங்கள் கிடைப்பதில்லை. ” உங்கள் நிறுவனத்தின் இன்டிரியர் பணிகள் சாதாரண மக்கள், நடுத்தர மக்கள் மற்றும் மேல்தட்டு மக்கள், இவர்களைப் பொறுத்து எப்படி வித்தியாசப்படுகிறது? “எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை எல்லாவகையான தரப்பினருக்கும் அவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் உள்ளலங்காரத்தை சிறப்பாக செய்து தருகிறோம். சிலர் அதிகமான பட்ஜெட்டில் வீட்டை கட்டி முடித்திருப்பார்கள். ஆனால் இன்டிரியருக்கென சிறிய தொகையையே ஒதுக்குவார்கள். குறைவான பட்ஜெட்டில் வீடு கட்டுபவர்களில் சிலர் பெரிய தொகையை செலவிடுவார்கள். எனவே, இன்டிரியர் பணி என்பது அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் தான் அமையும். வாடிக்கையாளர்களின் பட்ஜெட் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுவது. சில ஆயிரங்களில் இன்டிரியர் செய்துகொடுங்கள் என்று சொல்பவரும் உண்டு. இன்டிரியருக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பவரும் உண்டு. இரு தரப்பினருக்கும் உரிய பட்ஜெட்டில் நாங்கள் இன்டிரியர் பணிகளை மேற்கொள்கிறோம். சுருக்கமாக சொன்னால் பட்ஜெட் வீடுகளுக்கும், பங்களா வீடுகளுக்கும் இன்டிரியர் மிகவும் ஏற்றது”.எலைட் நிறுவனத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை கூறுங்கள் ? “எங்கள் நிறுவனத்தைப் பற்றி சிறப்பாக சொல்வதென்றால் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடும், ஒருமித்த உணர்வோடும் பணிகளைச் செய்வதுதான். வீட்டைக் கட்டி முடிக்கும் தருவாயில் வாடிக்கையாளர்களுக்கு எங்களுக்கென இருக்கும் ஆர்க்கிடெக்டுகளைக் கொண்டு நாங்களே டிசைன்களை வடிவமைத்துத் தருகிறோம். எப்படி செய்தால் அவர்களின் வீட்டின் உள்ளலங்காரம் நன்றாக அமையும்? எங்கே சுவர் அமைக்கலாம்? எங்கெல்லாம் எலெக்ட்ரிகல் பாயிண்டுகள் வைக்கலாம்? எந்த இடத்தில், எந்த வண்ணங்களில் பெயிண்ட் அடிக்கலாம்? என்பதைப் பற்றியெல்லாம் நாங்கள் அவர்களுக்கு எந்த செலவுமின்றி முன்னரே தெரிவித்து விடுவோம்.

       எங்களுக்குத் தெரிந்த நவீன தொழிற்நுட்பங்களைக் கையாண்டு இன்டிரியர் பணிகளை செய்து முடிப்போம். எங்கள் நிறுவனத்தில் சேல்ஸ் டீம், டிசைனர் டீம், புரடக்ஷன் டீம் மற்றும் கோர்ஸ் டீம் என்ற நான்கு வகை குழுக்கள் இருக்கின்றன. பயிற்சி அளித்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வாகும். எங்கெல்லாம் கட்டுமானம், இன்டிரியர் பற்றி கண்காட்சிகள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் முதலில் நாங்கள் சென்று பார்த்து விட்டு பின்பு இங்குள்ள பணியாளர்களுக்கு புதிய தொழிற்நுட்பங்களைப் பற்றிக் கூறி ‘இங்கேயும் நிச்சயம் நம்மால் செய்ய முடியும்’ என்று அவர்களுடைய மனதில் நம்பிக்கையை வளர்த்து அதன்படி பணிபுரியச் செய்வோம்” என்றார்
பிரதிப்குமார் .

எலைட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி பொதுமேலாளர் திரு ஏ.சி.ஜெயதேவ் அவர்கள் விளக்கிய போது,
“இன்டிரியர் அலங்காரம் தவிர தரமான மாடுலர் கிச்சன்கள், வார்ட்ரோப்கள் மற்றும் பரண்கள் ஆகியவற்றை லேமினேஷன், ரப்பர் வுட் மெம்பரின், பாலியூரிதின் போன்ற மூலப் பொருட்களினால் தயாரித்து குறைந்த விலையில் தருகிறோம். இவை அனைத்துமே எங்களது இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு இயந்திரங்கள் வைத்து தயாரித்தளிக்கிறோம்.

என்பது குறிப்பிடத்தக்கது. கதவுகளைப் பொறுத்தவரை எங்களிடம் 150க்கும் மேலான மாடல்களில், நிறங்களில் கண்ணைக் கவரும் கதவுகள் வாடிக்கையாளரின் ரசனைக்கேற்ப தயாரிக்கப்படுகின்றன. எங்களது மாடுலர் கிச்சன்கள் மற்றும் வார்ட்ரோப்களுக்கு 5 வருட உத்ரவாதத்தினை அளிக்கிறோம். வீடுகள் மட்டுமன்றி அலுவலகம் போன்ற பிற தேவைகளுக்கான இன்டிரியரும் எலைட் நிறுவனம் செய்து தருகிறது.

எங்களை தொலைபேசியில் அழைத்தால், எங்கள் நிறுவன அதிகாரிகள் வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று அவர்கள் வீட்டிற்கான இன்டிரியர் ஆலோசனை வழங்குவதுடன் இன்டிரியர் மாடல்கள், பிளானிங் மற்றும் எஸ்டிமேஷன் போன்றவற்றை விளக்கி விடுவார்கள்” என்றார். சென்னை மற்றும் புறநகர்களில்தான் இன்டிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் எலைட் நிறுவனம் விரைவிலேயே கோயம்புத்தூர், பெங்களூரு, கொச்சின், ஹைதராபாத் நகரங்களிலும் தனது சேவையை தொடங்க இருக்கிறது.

           பொதுமக்களுக்கு மட்டுமன்றி இன்டிரியருடன் வீடுகளை விற்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் எலைட் இன்டிரியரின் சேவை பொருத்தமானதாகவே இருக்கும்.