சிவில், மெக்கானிகல், எலெக்ட்ரிகல் ஆகிய இம்மூன்று துறைகள்தான் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள முதன்மைத் துறையாகும். நாங்கள் இந்த மூன்று துறைகளிலுமே முதன்மையாக உள்ளோம்” என்கிறார் அன்னை பொறியியல் கல்லூரியின் சிவில்துறைத் தலைவர் திரு. எஸ். ராஜன்முரளி.
கும்பகோணத்திலுள்ள அன்னை பொறியியல் கல்லூரி K.K.O.முஹம்மது இப்ராஹீம் கல்வி சாரிடபிள் ட்ரஸ்டால் 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு அண்ணா யூனிவர்சிடி ஆஃப் டெக்னாலஜி, திருச்சியுடன் இணைக்கப்பட்டதாகும்.
இங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தமிழ்வழிக் கல்வி என்பதால் அனைவரும் எளிமையாக பொறியியல் கற்றுத் தேர்ந்தவர்களாக வருகிறார்கள். மற்றத்துறை படிப்புகளை விட பொறியியல் துறை மிகக் கடினமான ஒன்று. ஆதலால் அதனை மனதில் வைத்து முழுமூச்சுடன் மாணவர்களுக்கு கல்வி தரத்தை சிறப்பாக வழங்கி வருகிறது அன்னை பொறியியல் கல்லூரி.
“இங்குள்ள சிவில் மாணவர்களுக்குத் தேவையான ஒர்க்க்ஷாப், லேப் போன்றவைகள் நவீன தொழிற்நுட்பம் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளன. எங்களிடம் அனைத்து விதமான ஆய்வுக் கூடங்களும் உள்ளன. சர்வே லேப், மெட்டீரியலின் வலிமையை பரிசோதிக்கும் லேப், FM எனப்படும் (Fluid Mechanical) லேப், மென்பொருள் ஆய்வகம், ஆட்டோகேட் (Autocad)ல் சிவில்துறை மட்டுமின்றி அனைத்து துறையினருக்கும் சுலபமாக விளங்கும் மென்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். டிரான்ஸ்போடேக்ஷன் லேப் மற்றும் என்வரமென்டல் இன்ஜினியரிங் லேப் போன்ற ஆய்வகங்களும் எங்கள் கல்லூரியில் உண்டு.
பயோடெக்னாலஜி மாணவர்கள் இணைந்து வைக்கோலில் இருந்து நைட்ரஜன் வாயுவை உண்டு பண்ணும் பரிசோதனையை செய்து வருகிறார்கள். விளையும் பொருட்களையே மறுசுழற்சி முறையில் யூரியா உரமாக
பயன்படுத்த சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். கான்கிரீட் தயாரிக்கும் மெட்டீரியல் சோதனையும் மாணவர்கள் செய்து வருகிறார்கள்” என்றார் திரு. எஸ். ராஜன்முரளி.
முதல்வர் திரு. L. கோதண்டபாணி அவர்களை சந்தித்து பேசியபோது
“இது முதலில் கலைக் கல்லூரியாக தொடங்கப்பட்டது. பிறகு மேலும் மாணவர்கள் பயனுற வேண்டி பொறியியல் துறையையும் துவங்கினோம். சிவில் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் முழு நேரப் பாடப்பிரிவில் 1300க்கு மேற்பட்ட மாணவர்கள்
பயில்கின்றனர். தேர்ச்சிவிகிதம் சிறப்பாக உள்ளது”
தமிழ்வழியில் பயின்று பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நீங்கள் செலுத்தும் சிறப்புக் கவனம் என்ன?
“தொடக்கத்திலே ஆங்கிலத்தில் பாடம் நடத்தினால் மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். எனவே, இரண்டு ஆண்டுகள் பாடத்தை எளிய நடையில் தமிழில் நடத்துவோம். டெக்னிகல் விதிகளை தமிழில்
மொழிமாற்றி கூற இயலாது. ஆதலால், அதனை கட்டாயம் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தியாக வேண்டும். எனவே, ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அதே நேரம் பாடங்களையும் சுலபமாக புரியும்படி நடத்துகிறோம்.
தொழிற்நுட்ப திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பெரிய நிறுவனங்களுக்கு வருடந்தோறும் சென்று அந்த நிறுவனங்களின் புராஜெக்டுகளில் பணி எவ்வாறு நடைபெறுகிறது என்பதனை ஆய்வு செய்யும் இன்டஸ்ட்ரியல் விசிட், இம்ப்ளான்ட் ட்ரெயினிங் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறோம்.
மேலும், மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான தொழிற்சாலைகளுக்கும், பெங்களூரு, ஆந்திரா, கேரளா போன்ற நகரங்களுக்கும் சென்று வந்திருக்கிறார்கள். அணைக்கட்டுகளை பார்வையிட குற்றாலம், பாபநாசம் போன்ற அணைகளுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்றார் முதல்வர்
திரு.L. கோதண்டபாணி.