தானே சொல்லும் பாடம்! மே-2013


கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒரு தேர்ந்த பொறியாளர், சிறந்த ஆர்கிடெக்ட் ஆகியோரை வைத்து கட்டடம் கட்டினால் கூடுதல் செலவாகும். அது வீண் செலவு என்று நினைத்து ஒரு மேஸ்திரியிடமோ அல்லது பொறியியல் படித்திராத ஒரு சில கட்டிடங்களை மட்டுமே கட்டிய அனுபவம் உள்ள ஒருவரிடமோ பணியை ஒப்படைத்துவிட்டு கட்டிடம் நன்றாக வர வேண்டும் என்றால் எப்படி வரும்? கட்டுமான விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு கீழ்க்காணும் வழிமுறைகள் அவசியம். மண் பரிசோதனை : ஒரு கட்டிடம் கட்டப் படுவதற்கு முன் முதலில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை மண் பரிசோதனை. ஆனால், இதை ஒரு சில கட்டுநர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பொதுமக்களிடையே இதைப்பற்றிய விழிப்புணர் வும் சரியாக இல்லை. பல லட்சங்கள் முதலீடு செய்ய விரும்பும் அனைவரும் அந்த முதலீட்டை பன்மடங்கு லாபத்துடன் திரும்ப பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இத்துறைக்கு வருவதால். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறது. முறைப்படி மண் பரிசோதனை மேற்கொண்டு அந்த மண் பரிசோதனை முடிவுகளின் படி எது போன்ற கட்டுமானங்களை அந்த இடத்தில் கட்டவேண்டும் என்று தேர்ந்த பொறியாளரின் மேற்பார்வையின் கட்டிடத்தை கட்ட வேண்டும். ஸ்ட்ரக்சுரல் டிசைன் : கட்டுமானம் நிலைபெற்ற கட்டிடங்களாக நிலைத்து நிற்பதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ட்ரக்சுரல் டிசைனிங்தான். கட்டிடம் கட்டுவதற்கான ஸ்ட்ரக்சுரல் டிசைனிங் பெற்ற பிறகு, அந்த டிசைனில் குறிப்பிட் டுள்ளபடி எக்ஸிக்யூட் பண்ண தெரிந்த நபரால் அந்தப் பணி செய்யப் பட வேண்டும். பணத்தை மிச்சப்படுத்துகிறோம் என்று நினைத்துக்கொண்டு ஸ்ட்ரக்சுரல் டிசைனில் குறிப்பிட்டுள்ளபடி 25துது ஸ்டீல் ராடுக்கு பதில் 20துது ஸ்டீல் ராடை பயன்படுத்தினால் அந்த கட்டுமானம் தரமற்றதாகிவிடுகிறது. அதேபோல் எல்லாம் இரும்பு கம்பிதானே என்று நினைத்துக்கொண்டு தரமற்ற கம்பிகளை பயன்படுத்துதல் கூடாது. கம்பிகளின் தரம் குறைந்தால் கட்டிடங்களின் ஆயுளும் குறைந்துவிடும். கான்ட்ராக்டர்கள் : குடியிருப்பு வளாகமோ அல்லது வணிக வளாகமோ கட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் அதை ஒரு சிறந்த கான்ட்ராக்டரிடம் ஒப்படைத்தால்தான் அந்த கட்டிடம் சிறந்த கட்டிடமாக கட்டி முடித்துத் தரப்படும்.பொதுவாக நாம் செய்யும் தவறு என்னவெனில் எந்த கான்ட்ராக்டர்கள் மிக குறைந்த பட்ஜெட்டில் கட்டுமானத்தை கட்டித்தர முன் வருகிறாரோ அவரிடம்தான் ஒப்படைக்கிறோம். குறைந்த பட்ஜெட்டில் கட்டித் தர முன்வரும் கட்டுநரிடம் நாம் எப்படி தரத்தை எதிர்பார்க்க முடியும் ? கட்டுநரை தேர்ந்தெடுக்கும் முன் அவரால் கட்டிமுடிக்கப்பட்ட கட்டுமானங்கள் எத்தனை? அவைகளின் தரம் என்ன? சிறந்த கட்டுநரா? என்று பல்வேறு விவரங்களை தெரிந்து கொண்ட பின்னரே அந்த கட்டுநரிடம் கட்டுமானப் பணியை ஒப்படைக்க வேண்டும். பட்ஜெட் என்று பார்க்காமல் சிறந்த கட்டுநருக்காக சில லட்சங்கள் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை என்று அவரிடமே ஒப்படைத்திடல் வேண்டும். பெரிய கட்டுமானங்களை கான்ட்ராக்டரிடம் போடும்போது அந்த கான்ட்ராக்டர் நேரடியாக அந்தப் பணியை செய்வதில்லை. அந்த வேலைக்கு கான்ட்ராக்டர் ஒரு ரேட் பெற்றுக்கொண்டு அதை சப்கான்ட்ராக்டரிடம் அவர் பெற்ற தொகையை விட குறைந்த ரேட்டிற்கு ஒரு சப் கான்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைக்கிறார். இப்படி அடுத்தடுத்த சப்கான்ட்ராக்டரிடமே செல்வதால் அவர்களால் தரம் கொடுக்கமுடிவதில்லை. க்யூரிங் : நாம் செய்த முதலீட்டை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதற்காக அவசரஅவசரமாக பணியை முடித்து அந்த கட்டிடத்தை விற்பனை செய்துவிடுவதால் அந்த கட்டிடங்கள் முறையாக க்யூரிங் செய்யப்படுவதில்லை. க்யூரிங் என்பது ஒவ்வொரு ஸ்டேஜிலும் காலை,மாலை மற்றும் குஷூப்பிட்ட நாட்கள் வரை செய்யப்படுவதாகும். இதை சில கட்டுநர்கள் சரிவரச் செய்வதில்லை. ரெடிமிக்ஸ் கான்கிரீட் (RMC) :தற்போதுRMC யால்தான் பெரும்பாலான கட்டிடங்களுக்கு கான்கிரீட் போடப்படுகிறது. ஆகவே, போட்டிபோட்டுக்கொண்டு நிறைய கம்பெனிகள் RMC தயாரிக்க தொடங்கிவிட்டன.RMC கான்கிரீட் போடும்போது பம்ப் செய்து மேலேற்றி சென்ற பிறகுதான் க்யூப் டெஸ்ட் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் கீழே க்யூப் டெஸ்ட்டை செய்துவிடுகிறார்கள். இந்த விவரம் அனைவருக்கும் தெரிவதில்லை. RMC-யில் தேர்ந்த தொழிலாளர்கள் அந்த பணிகளில் ஈடுபடுவதில்லை. ஒரு டிரைவர் அல்லது ஒரு தொழிலாளி இதைச் செய்யும் போது அதைப் பற்றிய ரேஷியோ அவர்களுக்குத் தெரிவதில்லை. கான்கிரீட்டை மேலேற்றும்போது தண்ணீர் அதிகம் கலந்துவிடுவதால் அது தரமற்ற கான்கிரீட் ஆகி விடுகிறது. அப்படித் தரமில்லாததால் அந்த கட்டிடத்தின் ஆயுளும் அதோகதிதான். ஆகவே, யூனிளீ என்றால் தரமான கம்பெனியை தேர்வு செய்வதன் மூலம் கட்டு மானத்தை தரமானதாக உருவாக்க முடியும். கம்பிகள் : ஸ்டீல் ஒர்க் செய்யும் போது ஒவ்வொரு காலம் லாப்பிங்கிற்கும் அதாவது 25MM ஸ்டீல் ராடுக்கு ஒரு மீட்டர் லாப்பிங் இருக்க வேண்டும். சில கான்ட்ராக்டர்கள் பணம் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கில் ஒரு கட்டிடத்திற்க 40 முதல் 50 காலம் வரை அமைக்கும்போது ஒரு பெரிய தொகை மிச்சமாகிறது. அந்த ஒரு மீட்டர் லாப்பிங்கிற்க்கு பதிலாக ஒரு அடி முதல் இரண்டு அடிக்குள் வைத்து விடுகிறார்கள். இதுபோன்று அமைக்கும்போது காலத்தில் க்ராக் ஏற்பட்டு விடும். பார்பென்டர், சூபர்வைசர் ஆகியோருக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரிவதில்லை. கட்டிடத்திற்குள்தானே இருக்கின்றது என்று மெத்தனமாக இருந்துவிடுகிறார்கள். அடுத்தது, கம்பிகளுக்கு இடையேயான ஸ்பேசிங் ப்ராப்பராக செய்வதில்லை.ஒவ்வொரு ஜங்க்ஷனிலும் ரிங்ஸ், லாப்பிங் மற்றும் ஸ்டீல் ராடுகளின் அளவை சரியாக பயன்படுத்த வேண்டும். கல்வி முறை குறைபாடு : கட்டிடவியல் படித்து முடித்து களப்பணியில் ஈடுபடும்போது அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். ப்ளு மெட்டல் என்றால் என்னவென்று தெரியவில்லை.ஜல்லிகளின் அளவுகள் தெரிவதில்லை. செங்கற்களின் நீளம் அகலம் உயரம் தெரிவதில்லை. கம்பிகளின் அளவுகள்,எந்த கம்பியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பவை தெரிவதில்லை. கட்டிடவியல் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும்போதே அவர்களுக்கு களப்பணியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். அப்படி பயிற்சி அளித்தால் சிறந்த மாணவர்களை உருவாக்கலாம். சிறந்த கட்டுமானங்களையும் உருவாக்கலாம்.