உங்கள் வீட்டு கூரை பாதுகாப்பானதா?நமது வீட்டுக்கூரை அமைக்கும்போது முக்கியமான சில விஷயங்களை அலசி ஆராய்வோம்.வெப்பத்தைத் தடுக்க வேண்டும். நீர்க்கசிவு இருக்கக்கூடாது. கரைகள் ஏற்படுத்தக்கூடாது, பாசிகள் படரக்கூடாது, முக்கியமாக வழுக்கக்கூடாது. ஆனால், நாம் வாங்கும் கூரை கட்டுமான பொருட்களுக்கு (டைல்ஸ்) இவற்றில் ஒரு தன்மை இருந்தால், இன்னொரு தன்மை இருக்காது. ஆனால், இந்த அனைத்து தன்மைகளும் ஒருங்கே பெற்ற புதிய டைல்தான் ரூஃப் ப்ளஸ் டைல்கள்.

100 சதவீத வெதரிங் கோர்ஸ் டைலான ரூஃப் ப்ளஸ் டைல்களைத் தயாரித்து அளிக்கும் ராசி டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான
திரு.சந்திரசேகரை கேட்ட போது  ‘‘வீடு கட்டும் சாதாரண மக்கள் தங்கள் கூரைகளை பாதுகாப்பாக அமைக்கத் தவறி விடுகிறார்கள். கூரை என்பது வெப்பத்தை தடுப்பதற்கும், நீர்க்கசிவு ஏற்படாமல் காப்பதற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கட்டிடத்தின் உறுதியை
காப்பாதாக அமைய வேண்டும். அதாவது, சாதாரண கூரை தளங்கள் 1 ச.அடிக்கு 15 முதல் 17 கிலோ எடையுள்ளதாகவும், அதுவே மழைக்காலத்தில் 20 கிலோ எடையுள்ளதாகவும் கனக்கிறது. ஆனால், ரூஃப் டைல்கள் கொண்டு கூரை அமைக்கும்போது எல்லா காலங்களிலும் அதிகபட்சம் 7 கிலோவிற்கு மேல் கனம் இருக்காது.
எனவே, கட்டிடத்திற்குத் தேவையற்ற கனத்தை கொடுக்காததும், சூடான வெப்பக் கதிர்களை உள் வாங்காததும், அறைகளின் குளுமையை வெளியே கடத்தாததும், நீர்க்கசிவிற்கு ஒரு துளியும் இடம் கொடுக்காததுமான வெகு சிக்கனமிக்க பசுமைக்கட்டிட பொருளான ரூஃப் ப்ளஸ் டைல்கள் உங்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பான கூரையை தரும் என்பதில்
ஐயமில்லை’’.

கூரைகளுக்கு ரூஃப் ப்ளஸ் டைல்களை பொருத்தும் முறை பற்றி...
‘‘பழங்காலம் போல, சுண்ணாம்பு பவுடர், கடுக்காய் போன்ற பல பொருட்களைக் கொண்டு நாள் கணக்கில் வெதரிங் கோர்ஸ் அமைக்க இனியும் தேவை இருக்காது. சாதாரண கான்கிரீட் தளம் மீது நமது டைல்களை அமைக்கலாம். முதலில் ரூஃப் ப்ளஸ் டைல்களை சுத்தமான நீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். தளங்களின் மேற்பரப்பை சீர்படுத்தி, சிமெண்ட் கலவையை பூச வேண்டும். (எங்களிடம் உள்ள விசேஷ மான ரசாயன பூச்சை டைல்களின் இடையில் கிரௌட்டிங் மீது பூசிவிட்டால் நீர்க்கசிவு இருக்காது).

   பிறகு ரூஃப் ப்ளஸ்டைல்களை ஒட்டிவிட்டால் அவ்வளவு தான், வேலை முடிந்தது’’ என்றார்.
ஐ.ஜி.பி.சி (இந்தியன் கிரீன் பில்டிங் ஹவுசிங்) சான்றிதழ் பெற்ற இந்த ரூஃப் ப்ளஸ் டைல்கள் ஒரு சதுர அடி அளவில் பல வண்ணங்களில் கிடைக்கின்றன என்பதாலும், கூரைகளில் பொருத்துவது எளிது என்பதாலும் இதற்கு அதிக அளவு வரவேற்பு உள்ளது.
கட்டுநர்கள் தங்களது புராஜெக்டுகளில் பயன்படுத்த மிகவும் உகந்தது  ரூஃப் ப்ளஸ் டைல்ஸ்கள் என்பதோடு அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் கட்டுநர்களுக்கு வெகு சிக்கன விலையில் கிடைக்கிறது ரூஃப் ப்ளஸ் டைல்கள்.